Saturday, 29 August 2020

அலை!

ஓசை உண்டு உனக்கு, 
கரையைச் சேரும் வரை.
உணர்வுண்டு உனக்கு, 
மண்ணைத் தொடும் வரை.
தாய்மை உண்டு உனக்கு, 
படகுகளைத் தாலாட்டும் வரை.
ஓய்வில்லை உனக்கு,
உலகம் அழியும் வரை!
---------------
காத்துக்கொண்டிருக்கிறது கரை-
எப்பொழுது தன்  காதலை ஏற்றுத் தன்னுடன் 
அழைத்துச் செல்லுமோ அலை!

No comments:

Post a Comment