Tuesday, 15 September 2020

ஏதோ ஓர்....

ஏதோ ஓர் ஊரில்
ஏதோ ஓர் தெருவில்
ஏதோ ஓர் மழை நாளில்
ஏதோ ஓர் வீட்டின் வாசலில்
ஏதோ ஓர் காகிதக் கப்பல்
மிதந்து கொண்டுதான் இருக்கிறது
குளம்போல் தேங்கிய மழை நீரில்!

மண்!

தாய் சுமந்த மாதங்களோ 
விரல்  விட்டு எண்ணிவிட
நீ சுமந்த நாட்களையோ எண்ணுவதற்குள் எனைப் புதைக்க
ஒரு  பிடி அள்ளி என் மீது உனைத்  தெளிக்க
அன்னையென உனை  அனைத்து
உன்மடியில் உறங்கிடுவேன் !

Sunday, 6 September 2020

மலர்!

பறிக்கப் படாத மலர்கள் 
அழகுதான் - ஓவியத்தில்
பறித்த மலர்கள் 
அழகுதான் - அவள் கூந்தலில்! 
---------------------
மலர்கள் வாடுவதில்லை 
என்றோ வரைந்து வைத்திருந்த பாட்டியின் ஓவியத்தில்!

மலர்....

பூத்து குலுங்கி 
அழகு நடனமாடி
தேனீக்களின் பசி ஆற்றி 
மழைத் துளிகளைச் சுமந்து 
சூரிய ஒளியில் திளைத்து ...
பறித்த பின்னும் 
மாறுவதில்லை மலரின் வாசம்!

ஊஞ்சல்!

குழந்தைகள் சப்தம் நிரம்ப
ஊஞ்சல் அசைத்துத் தன் பிள்ளை
காற்றில் மிதந்து தன்னிடமே வரும் தருணம்
அன்னையின் சிந்தையில் 
அவள் அன்னை தோன்ற
விழி ஓரம் வடியும் கண்ணீரில் படர்ந்தது
புடவையின் வாசம் - ஆலமரத் தொட்டில்