Wednesday, 27 May 2020

மஞ்சப்பை

கடைக்குச் சென்று கறி வாங்கிவா என்றார் அம்மா 
செல்பேசியில் காதலியின் மெசேஜ் வந்தது 
மணி 12 ஆனது 
மேஜைமேல் மஞ்சப்பையோ காற்றாறியது!

வாசம்

பல ரயில் பெட்டிகளின் ஜன்னல் காற்றில்
இன்றும் வீசும் 
அம்மாக்கள் செய்த 
ரயில் சட்னியின் வாசம்! 

காதல் கிறுக்கன்

விழித்திருக்கிறேன் நான் அவளிடம் இருந்து வரவிருக்கும் குட் மார்னிங் என்ற வார்த்தைக்காக!

காத்திருப்பு

செல்பேசியில் காதலிக்கும் காதலர்களுக்குத் தெரியாது 
கடிதத்தில் காதல் செய்த காதலர்களின் காத்திருப்பைப் பற்றி!

பேனா மை

கவிதை எழுதுவதற்கு முக்கியம் வார்த்தைகள் என்றேன் , மெல்லச் சிரித்தது பேனா மை!

பானை

பானை
----------------------------
அரிசியுடன் உன் காதல்,
அத்தனை இளைஞருக்கும் பொறாமை, 
காதலாய்ப் பொங்கி உடன் ததும்பும் விதத்தை - கற்கக் காத்திருக்கிறான் ஒரு தலை காதலன்!
----------------------------
வயிற்றில் சுமக்கும் 
குழந்தையின் பனிக்குடமாய்,
கத்திரி வெயிலின் சூடு தணிக்க 
நீ சுமக்கும் குளிர் நீரில் காண்கிறேன்- அன்னையின் பாசம்!

குடை

குடை 
-----------
தான் நனைந்தும் தன் பிள்ளைகள் நனையாமல் இருக்க, அன்னை போர்த்தும் சேலையை நினைவூட்டும் - 
ஒரு சிறு தலை கவசம் 
-----------------------
மழையில் நனைந்த பிள்ளைகளை  வீட்டுள் அழைத்து தலையை துவட்டிவிடும் அன்னையின் பாசத்தை அறியாத ஒரு பிள்ளையாக உன்னை வாசலோடு வைத்துவிட்டு வருவது ஏனோ?! 
------------------------
நான் நனையாமல் இருக்க சுமந்து செல்லும்  உன்னை, நீ நனைந்த பின் சுமக்க மறுக்கிறேன்.

முட்டை

முட்டை
-----------------------------------
கணக்குப் பாடத்தில் நான் வாங்கிய உன்னை பயன்படாது என்று சொன்ன பள்ளிக்கூடம், மதிய சத்துணவில் 
உன்னைப் பயன்படுத்தும் விந்தை ஏனோ! 

தூண்டில்

தூண்டில்
-----------------------------------
பாசக்கயிறாய் வந்து என் உயிரைப் பறிக்கிறாய் - இப்படிக்கு மீன் 
-----------------------------------
தொண்டையில் சிக்கித் துடிக்கும் போது தான் நினைவுக்கு வருகிறது தூண்டிலில் சிக்கிய மீனின் அவதி!
------------------------------------
உன்னிடம் சிக்கித் தவித்த சிலநொடிகளில் உணர்ந்தேன் 
கடலுடன் நான் கொண்ட காதலை!

ஏணி

ஏணி
-----------------------------------
கருவறையில் இறக்கி மணவறை வரை ஏற்றிச் செல்லும் 
ஓர் அழகிய ஏணி - அம்மா!

மீசை

இருபதில் பெற்ற உன்னை முப்பதில் இழக்கிறேன் என் குழந்தைக்கு நான் தரும் முத்தத்திற்காக!

பிரிந்த காதல்!

நான் பார்க்கும் நிலவும் அவள் பார்க்கும் நிலவும் ஒன்றுதான் 
நான் பார்ப்பது என் குழந்தையுடன் அவள் பார்ப்பது தனிமையுடன்

நான் பார்க்கும் இரவும் அவள் பார்க்கும் இரவும் ஒன்றுதான்
நான் பார்ப்பது என் மனைவியுடன் அவள் பார்ப்பது அவள்
கணவனுடன் 

நான் பார்க்கும் விடியலும் அவள் பார்க்கும் விடியலும் ஒன்றுதான் நான் பார்ப்பது என் மனைவியின் முகத்தில் 
அவள் பார்ப்பது அவள் கணவனின் பாதத்தில் 

அவள் காதலுக்கு என் காதலும் ஒன்றுதான் 
அவள் காதலித்தது என் காதலை நான் காதலித்தது அவளை 

அவள் சிந்தனையும் என் சிந்தனையும் ஒன்று தான் 
அவள் சிந்தித்தது அவளுக்காக நான் சிந்தித்தும் அவளுக்காக 

அவள் முடிவும் என் முடிவும் ஒன்றுதான் 
அவள் முடிவோ என்னை விட்டுச்செல்ல 
என் முடிவோ அவள்
நினைவிற்குள் செல்ல! 

மனஅழுத்தம்

மனிதனின் மனஅழுத்தத்தின் வெளிப்பாடு கண்ணீர் 
கடலின் மனஅழுத்தத்தின் வெளிப்பாடு சூறாவளி 
பூமியின் மனஅழுத்தத்தின் வெளிப்பாடு நில நடுக்கம
சூரியனின் மனஅழுத்தத்தின் வெளிப்பாடு கத்திரி 
நிலவின் மனஅழுத்தத்தின் வெளிப்பாடு தேய்பிறை 
கடவுளின் மனஅழுத்தத்தின் வெளிப்பாடு மனிதர்கள்!

வாழ்வின் அர்த்தம்

சுழல்கின்ற இந்த பூமியில் 
கடிகாரமாய் ஓடும் மனிதர்கள் 
இருளில் ஒளி தரும் நிலவு 
பகலை இருளவைக்கும் மேகம் 
கத்திரியில் வாடும் மரங்கள் 
மழையால் குளிரும் பூமி 
இப்படி அன்றாட உலக நிகழ்வுகள் நிகழ 
அதை அமைதியாய் பார்த்துக்கொண்டு 
சுழலாமல் நிற்கின்றேன் நான்
 என் வாழ்வின் அர்த்தத்தை தேடி!

முதுமை

தடுமாறும் கால்கள் 
நரை தட்டும் தலைமுடி 
முடிவில்லா இயற்கை 
முற்றுப்பெறாத நம் காதல் 
கடைசிவரை நீயும் நானும்!

காதல்

காதலின் முப்பரிமாணங்கள்
----------------------------------
பிள்ளைக்கிளிகள் - ( kids ->Adolescent)

'கா' கோபமிட்டு 'தல்' மல்யுத்ததோடு புரியா வயதில் விளையாடும் பிள்ளைகள் 
'காதல்' என்று ஒன்றிணைத்து பேசி இணையும் பருவம் தான் காதல்!
----------------------------------
காதல்கிளிகள் - ( Lovers )

'கா' என்ற எழுத்தையும் 'தல்' என்ற சொல்லையும் ஒன்றிணைக்க அதன் இடையே இருக்கும் இருவரின் கனவு தான் காதல்!
----------------------------------
கூட்டுக்கிளிகள்-( Married ) 

'கா' என்ற எழுத்தையும் 'தல்' என்ற சொல்லையும் இழுத்துப் பிடிக்க பாடுபடும் இருவரின் வாழ்க்கை தான் காதல்!