மனதின் கிறுக்கல்
Tuesday, 3 November 2020
சொல்லாமல் சொல்கிறது!
குடையை உயர்த்தி
தலையை நீட்டி
மழை விட்டதா என்று பார்க்கையில்
மழைத் துளி ஒன்று
கண் இமையில் விழுந்து
கண்களை நன்கு துடைத்துப் பார் என்று
சொல்லாமல் சொல்கிறது!
அழகு!
காக்கை கூட அழகுதான்
மழையில் நனைந்து
உடலை அசைத்து
நீரை உலர்த்தும் பொழுது!
பிரிவின் மிச்சம்!
மழை ஓய்ந்த பின்னும்
அதன் நீனைவுகளாய்
தேங்கி நிற்கும் மழை நீர்
பிரிவின் மிச்சம்!
மழையுடன் கொண்ட காதல்...
மழையுடன் கொண்ட காதல்
தோல்வியடைந்ததால்
இதயம் வெடித்து
ஓட்டையானது,
சாலைகளின் சிறிய பள்ளங்கள்!
ஒரு குடை!
இருப்பது ஒரு குடை
தன் பிள்ளைக்குத் தந்துவிட்டு
புடவையைத் தலை மேல் போர்த்தி கடைக்குச் சென்றால் அம்மா
பத்திரிக்கையை மடித்து கவசம் போல் பிடித்து
மிதிவண்டியை மிதித்தபடி வேலைக்குச் சென்றார் அப்பா
அன்பின் மழை!
Monday, 2 November 2020
கனமழை!
அடர்த்தியான ஒலியில்
மஞ்சள் ஒளியில்
இரவின் நிசப்த வெளிச்சத்தில்
பூமியை இறுக்கி அணைத்தது கனமழை!
கண்ணுக்கெட்டாத கனமழை!
இரவின் கருநிற வெளிச்சத்தில்
கண்ணுக்கெட்டாத கனமழை
தெருவிளக்கின் மஞ்சள் ஒளியில் தென்பட்டது!
மனிதநேயத்தின் மழை!
தேங்கிய மழை நீரை
வேகமாய் அடித்துக்கொண்டுவரும் வாகனம்
ஒரு நிமிடம் நடைபாதை மக்களுக்காக
வேகம் குறைத்தபோது
உணர்ந்தேன் மனிதநேயத்தின் மழையை!
நினைவலைகள்!
அனைத்து ரயில் பயணங்களிலும்
அனைத்து பேருந்து பயணங்களிலும்
அனைவரின்
நினைவலைகளைச்
சுமந்து செல்கிறது
ஜன்னல் வழி காற்று!
ஒன்பது மாதம்!
ஒன்பது மாதம் கரு சுமந்த மனைவியின்
கருவறையிலிருந்து வெளிவரவிருக்கும் குழந்தையைப் பார்க்க
ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் தகப்பனை போல
ஒவ்வொரு வருடமும்
ஒன்பது மாதம் காத்திருக்கிறேன்,
பூமியின் முதல் மழைக்காலத்து மழைத்துளியைத் தரிசிக்க!
மழைக்காலம்!
மழைக்காலம் தொடங்கவிருக்கும் செய்தியை அறிந்ததுமே
மண் வாசம் வீசத் தொடங்குகிறது மனதில்!
மேளதாளம்...
மழையின் மேளதாளத்தை உணர
செவிகள் இருந்தால் போதும்
மனதிற்கு!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)